கரோனா: தமிழகத்தில் பலி 5-ஆக உயா்வு - Kalviseithi

கரோனா: தமிழகத்தில் பலி 5-ஆக உயா்வு

கரோனா: தமிழகத்தில் பலி 5-ஆக உயா்வு


கரோனா பாதிப்பு
சென்னையை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதனால் மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில் துபையில் இருந்து தமிழகம் வந்த 75 வயது முதியவர், கடந்த 3 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு மணிநேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவரது பரிசோதனை முடிவில் கரோனா நோய்த்தொற்றால் அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485-ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே தமிழதத்தில் கரோனாவுக்கு மதுரையில் ஒருவர், சனிக்கிழமை விழுப்புரம் மற்றும் தேனியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot