PM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள் - Kalviseithi

PM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்

PM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்

PM Modi speech : யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்துள்ளோம்.

PM Narendra modi speech : உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று, தற்போது இந்தியாவிலும் அதிகரிக்க துவங்கியுள்ளதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மதித்து நடப்பவர்களுக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவின் ஊரடங்கு உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது.
பிரதமர் மோடி,நாட்டு மக்களிடையே வீடியோ உரையின் மூலம் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது, வீடுகளில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களில், சிலருக்க நாம் எப்படி கொரோனாவுக்கு எதிராக தனியாக போராட முடியும் என நினைக்கலாம். அது போன்ற கேள்வி அவர்களின் மனதில் எழும்? ஆனால் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்துள்ளோம்.
கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மார்ச் 22 அன்று, மக்கள் செலுத்திய நன்றியை, மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக அதனை பின்பற்றுகின்றன. மக்கள் ஊரடங்கு, மணியோசை எழுப்பியதன் மூலம், சவாலான நேரத்தில் நாடு ஒற்றுமையாக உள்ளதை உணர்த்தியது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். கொரோனா வைரசை பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்.நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது. கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது.
வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது.வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கடவுளின் வடிவம். ஏப்ரல் 5ம் தேதி வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்கள், வீட்டின் நான்கு மூளைகளிலும் டார்ச், அகல் விளக்குகள், மொபைல் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். அப்போது நாட்டு மக்கள் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்து வரும் நாட்களில், மேற்கொள்ள வேண்டிய சோதனைகள், தொடர்பு தடமறிதல், தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தனஆ முந்தைய உரைகளில் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், 21 நாட்கள் கால அளவிலான நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. பல நாடுகளில் இரண்டாம் கட்ட தொற்று பரவிவரும் நிலையில், இந்தியாவில் இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 2ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot