ஊரடங்கு முடியும் வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறாது
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 27-ம் தேதியிலிருந்து பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிதமிழகஅறிவித்திருக்கிறதது
இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய அச்சங்கத்தின் மாநிலப் பொருளாளர் நீ.இளங்கோ, “கரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இப்போது உள்ள நிலையில் மே 31-ம் தேதியுடன் பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்படுமா அல்லது மேலும் தொடருமா என்று தெரியவில்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகப் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் அறிவிப்புகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன. இந்த நிலையில், தற்போது பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் முழுவீச்சில் இல்லாத நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி மே 27-ல் தொடங்கும் என அரசு அறிவித்ததுள்ளது. பொது முடக்கத்தால் ஆசிரியர்கள் பலர் வெளியூர்களிலும், வெளி மாவட்டத்திலும், வெளி மாநிலங்களிலும் இருந்து வருகின்றனர். ஆனால், கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் மே 26- ம் தேதி பள்ளிக்கு வந்தாக வேண்டும். மே 27- ல் அனைத்து ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் ஆசிரியர்களால் எப்படி பள்ளிக்கு வரமுடியும்? அவர்களால் எப்படி விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குச் செல்லமுடியும்?ஆசிரியர்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேலானவர்கள் பெண்கள். கரோனா காலத்தில் அவர்கள், தங்கள் குழந்தைகளை யாருடைய பராமரிப்பிலும் விட்டு வரமுடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் சற்றும் யோசிக்காமல் கல்வித்துறை, இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது ஆசிரியர்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கி இருக்கிறது. மேலும், கரோனோ பற்றிய அச்சம் மேலோங்கிய நிலையில், ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வது ஆபத்தானது. விடைத்தாள்களைப் பலரும் கையாள வேண்டிய நிலை. இதனால் தொற்று பலருக்கும் எளிதாகப் பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம் . ஆசிரியர்கள் இந்த அச்சத்தோடு நுட்பமான பணியான விடைத்தாள் திருத்தும் பணியை எவ்வாறு மேற்கொள்ளுவது. இது கவனச் சிதறல் இல்லாமல் செய்யவேண்டிய பணி. மாணவர்கள் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் முக்கியான பணி. விடைத்தாள் திருத்தும் செயலில் சிறிதளவு மதிப்பெண் வேறுபாடு வந்தாலும், அதிகாரிகள் முன்பு கைகட்டிப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கு இருுுுுுுுக்கிறதுக்கிறதக்கிறக்கிக்கக்க
No comments:
Post a Comment