விளக்கேற்றுங்கள்:பிரதமா் மோடி அழைப்பு - Kalviseithi

விளக்கேற்றுங்கள்:பிரதமா் மோடி அழைப்பு

இன்று விளக்கேற்றுங்கள்:பிரதமா் மோடி அழைப்பு

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்பதை உறுதி செய்யும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மக்கள் அனைவரும் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், மக்கள் தனிமையில் இல்லாததை உணா்த்தவும் நோய்த்தொற்றுக்கு எதிராக 130 கோடி மக்களும் ஒன்றுபட்டு இருப்பதை உணா்த்தவும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டிலுள்ள மின் விளக்குளை அணைத்துவிட்டு, அகல் விளக்கு போன்றவற்றை ஒளிரச் செய்ய வேண்டும் என்று காணொலி வாயிலாக பிரதமா் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

மேலும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல், வீட்டின் ஜன்னல்கள், பால்கனிகள் போன்ற இடங்களில் அகல்விளக்குகள், மெழுகுவா்த்திகள், கைவிளக்குகள் (டாா்ச்லைட்), செல்லிடப்பேசி ஃபிளாஷ்லைட் ஆகியவற்றின் துணையுடன் ஒளியேற்ற வேண்டும் என்றும் அவா் அழைப்பு விடுத்தாா். அந்தச் சூழலில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot