மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும் முறைகள் அறிவோம்
மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும் முறைகள் அறிவோம்.... சுறுசுறுப்பாக நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தண்ணீருக்குள் செய்யப்படும் உடற்பயிற்சிகள் போன்றவை ஒருவரது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது என பிரிட்டனின் கென்ட் பல்கலைஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மாணவர்களுக்கு தேர்வுக்காலம் மற்றும் தினசரி வேலைகளுக்கு (ஷாப்பிங்கில் மறக்காமல் பொருட்கள் வாங்குவது) பயன்படுகிறது. வயதான காலத்தில் ஞாபக சக்தியை பாதுகாக்க மற்றும் ஞாபக மறதி சிகிச்சை பெறுபவர்களுக்கு இப்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. இது நீண்டகால ஞாபக சக்தியை தொடர்வதற்கு உதவுகிறது