விடைத்தாள் திருத்த செல்லும் ஆசிரியர்களுக்கு E - Pass தேவையில்லை - Kalviseithi

விடைத்தாள் திருத்த செல்லும் ஆசிரியர்களுக்கு E - Pass தேவையில்லை

விடைத்தாள் திருத்த செல்லும் ஆசிரியர்களுக்கு E - Pass தேவையில்லை

வழக்கமாக பொதுத் தேர்வு முடிந்து ஓரிரு நாட்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி விடும். ஆனால் இந்த முறை கடந்த மார்ச் 24 ஆம் தேதியே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் விடைத்தாள்கள் வந்துள்ளன.
ஆனால் சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், சென்னையில் விடைத்தாள்கள் திருத்தும் பணியை நடத்தாமல் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க தேர்வுத்துறை முடிவெடுத்துள்ளது இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக வரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். அதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். விடைத்தாள் திருத்தும் பணிகளை கண்காணிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot