கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாத நிலையில் பெற்றோருக்கான கூட்டத்தை நடத்திய பிரபல முன்பள்ளி - Kalviseithi

கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாத நிலையில் பெற்றோருக்கான கூட்டத்தை நடத்திய பிரபல முன்பள்ளி

கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாத நிலையில் பெற்றோருக்கான கூட்டத்தை நடத்திய பிரபல முன்பள்ளி


கல்வி நிறுவனங்களை திறப்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள முன்பள்ளியினர் அங்கு கற்கும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து கடந்த 13 ஆம் திகதி கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த முன்பள்ளிக்கு பொறுப்பாக செயற்படும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மருமகள் ஒருவர் கூட்டத்தை வழி நடத்தியுள்ளார்.

முன்பள்ளிக்காக மாத கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோருக்கு இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 18 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.கால்டன் என்ற இந்த முன்பள்ளி நிறுவனத்தை பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச நடத்தி வருகிறார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இந்த முன்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய பாடசாலைகளில் முதலாம் ஆண்டில் சேரும் வாய்ப்பும் வழங்கப்பட்டு வந்ததாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot