இன்றைய செய்திகள் 19.05.2020(செவ்வாய்க்கிழமை - Kalviseithi

இன்றைய செய்திகள் 19.05.2020(செவ்வாய்க்கிழமை

இன்றைய செய்திகள்
19.05.2020(செவ்வாய்க்கிழமை)
🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑⛑ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு போதுத் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  நாடு முழுவதும் ஒரு அட்டவணையும், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
⛑⛑கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஆசிரியர்கள்‌ முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு - பள்ளிக்கல்வி துறை  அமைச்சர்‌
⛑⛑சுயநிதிபள்ளி ஆசிரியர்களுக்கு  மார்ச்,ஏப்ரல் மாத ஊதியம் மறுப்பு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி
⛑⛑கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 25ல் தொடங்கி ஜூலை 4 வரை நடைபெற உள்ளதாக கர்நாடக  அரசு தெரிவித்துள்ளது
⛑⛑ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி தரப்பட்டுள்ள நிலையில், 'பள்ளியை திறந்ததும், தேர்வு நடத்துவோம்' என, சில தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதால், பெற்றோர் குழப்பம் அடைந்து உள்ளனர்.கல்வித்துறை  நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை. -  நாளிதழ் செய்தி
⛑⛑தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் நேற்று பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
⛑⛑தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வழிபாட்டு தலங்களை திறக்க கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
⛑⛑சத்தீஸ்கரில் 144 தடை உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக, அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
⛑⛑தனியார் போக்குவரத்து செயலிகளில், வரும் ஜூன் 7 -ஆம் தேதி முதல் இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு நடைபெறுகிறது. இதன் மூலம் ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
⛑⛑தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களைத் தவிர பிற காரணங்களுக்காக விடுப்பு எடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
⛑⛑விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
⛑⛑மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு பொருளாதார திட்டங்கள் போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.
⛑⛑பருவத் தேர்வுக்காக மாணவர்களின் விவரங்களை மே 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
⛑⛑கொரோனா நோய்த்தொற்று உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணையை உலக சுகாதார அமைப்பு நடத்துவதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
⛑⛑சுகாதார ஆணையம் ஒப்புதல் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கான முதல் கனேடிய மருத்துவ ஆய்வுக்கு கூட்டாட்சிச் சுகாதார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
⛑⛑கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இத்தாலியிலும் வாடிகனிலும் மூடப்பட்டிருந்த தேவாலயங்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டு பிராா்த்தனைகள் நடைபெற்றன
⛑⛑ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் நேசிக்கும் ஐபிஎல் டி20 தொடர் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
⛑⛑"கொரோனாவிற்கு பின் சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டது"
⛑⛑கர்நாடக மாநிலத்தில் ஜூன் 25 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: அமைச்சர்  சுரேஷ்குமார்
⛑⛑கேரள மாநிலத்தில் 50% வணிக வளாகங்களை சுழற்சி முறையில் திறக்க அனுமதி
ஏசியை பயன்படுத்தாமல் சலூன் கடைகள், அழகு நிலையங்களை திறக்கலாம்
- முதல்வர் பினராயி விஜயன்                          ⛑⛑மின்கட்டணம் செலுத்த ஜூன் 6 வரை அவகாசம் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
⛑⛑நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு
👉ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு
👉ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு
👉காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு
👉தேர்வர்கள் சானிடைசர்கள் கொண்டு வர அறிவுறுத்தல்
👉மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்
👉முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்
👉தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும்.
⛑⛑கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்; மாவட்டத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும்
👉கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் பொதுபோக்குவரத்து சேவை
👉அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்து உத்தரவு
- முதல்வர் எடியூரப்பா
⛑⛑உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் அம்பன் புயல்- பிரதமர் மோடி அவசர ஆலோசனை
உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை
அம்பன் புயல் மே 20ம் தேதி மேற்கு வங்கம், வங்க தேசம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு
⛑⛑உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் அம்பன் புயல்- பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை
அம்பன் புயல் மே 20ம் தேதி மேற்கு வங்கம், வங்க தேசம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு.
⛑⛑ஊரடங்கு வழிகாட்டுதல்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்கக் கூடாது
மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம்.
⛑⛑கட்டுப்பாட்டு பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனித்தேர்வு மையம்: பள்ளிக்கல்வித்துறை
⛑⛑10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்; தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை
- அமைச்சர் செங்கோட்டையன்
⛑⛑சென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்
⛑⛑லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள, கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை வெற்றியடைந்தால், அது செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
⛑⛑நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து  1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவா்கள், ஏதேனும் ஒரு கலைக்கல்வி படிப்பைத் தோ்வு செய்து படிக்க வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியது:
👉பள்ளி மாணவா்களுக்கு நமது நாட்டின் கலாசார முக்கியத்துவமும் அவற்றின் பல்வேறு வகைப்பட்ட தன்மையும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இதற்காக கல்வியுடன் ஒருங்கிணைந்த கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த செயல் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் விருப்பத்தின் பேரில் கற்கலாம்.
👉இது தொடா்பான செயல்திட்டங்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்களை வழங்கலாம். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் கலை வடிவ செயல்திட்டம் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது அவசியம்.
👉‘ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்’ திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்களின் கலை வடிவத்தைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். எந்தெந்த மாநிலங்கள் எந்தெந்தக் கலையைப் பயன்படுத்தலாம் என்ற விவரங்கள் சிபிஎஸ்இ வலைதளத்தில் உள்ளன.
👉அதே நேரத்தில் கலைவடிவ செயல் திட்டங்களை சூழலுக்கு ஏற்ற வகையில், உள்ளூா் வளங்களை வைத்து மேற்கொள்ள வேண்டும். பெற்றோா் அல்லது பாதுகாவலா்களைப் பொருளாதார ரீதியில் சிரமத்துக்கு ஆளாக்கக்கூடாது. பாட ஆசிரியா்களும் கலை ஆசிரியா்களும் இது குறித்து மாணவா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.
⛑⛑தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு.
சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11760 ஆக உயர்வு.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot