பள்ளிக் கல்வி - 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் / உரிமை விடல் செய்தவர்கள் விபரம் கோரி (பணிவரன்முறை செய்யும் பொருட்டு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - - Kalviseithi

பள்ளிக் கல்வி - 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் / உரிமை விடல் செய்தவர்கள் விபரம் கோரி (பணிவரன்முறை செய்யும் பொருட்டு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! -


பள்ளிக் கல்வி - 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் / உரிமை விடல் செய்தவர்கள் விபரம் கோரி (பணிவரன்முறை செய்யும் பொருட்டு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! -



01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய 02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற இணையதள வழி கலந்தாய்வு மூலம் கலந்து கொண்டு பதவி உயர்வு , பணிமாறுதல் பெற்றவர் பணியில் சேர்ந்த விவரம் கோரப்பட்டமைக்கு 110 நபர்கள் சார்ந்த விவரங்கள் வரப்பெறாததால் , 110 நபர்களின் பட்டியல் இணைத்து அவர்கள் சார்ந்த விவரங்கள் 28.02.2020 க்குள் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது.


மேற்கண்ட 110 நபர்கள் பட்டியல் இணைத்து விவரங்கள் கோரப்பட்டதைத் தொடர்ந்து 05.03.2020 நாளிட்ட செயல்முறைகளில் நினைவூட்டு அனுப்பிய நிலையிலும் நாளது வரை 50 நபர்கள் விவரம் வரப்பெறாததால் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மீண்டும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. எனவே , 17.02.2020 நாளிட்ட செயல்முறைகளுடன் அனுப்பப்பட்டுள்ள 110 நபர்களின் பட்டியலினை சரிபார்த்து அதில் கீழ்க்கண்ட வரிசை எண்ணில் உள்ள 50 நபர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆதார நகல்களுடன் 05.06.2020 க்குள் அனுப்பி வைக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot