ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன - Kalviseithi

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

கரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம்.
மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். ஆனால், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.
ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி
ஏப்ரல் 20க்கு பின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot