நாளை முதல் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் !! - Kalviseithi

நாளை முதல் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் !!

நாளை முதல் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் !!


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து வங்கிகள் காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வங்கிகள் நாளை முதல் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது ; வங்கி ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்ற நோக்கில், அவசர தேவைகளுக்கு மட்டும், வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும், வங்கிகளின் வேலை நேரமும், காலை, 10:00 முதல் மாலை, 2:00 மணி வரை குறைத்திட, மாநில அளவிலான வங்கிகள் குழு, சுற்றறிக்கை அனுப்பியது. இந்நிலையில், மத்திய அரசு வழங்கும் நேரடி நிவாரண நிதியை பயனாளிகள் பெறும் வகையில் வங்கிகள் மீண்டும், மாலை 4:00 மணி வரை செயல்பட வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இன்று வங்கிகளில் பண பரிவர்த்தனை கிடையாது நாளை முதல் வங்கிகள் மாலை  4:00 மணி வரை செயல்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot